பக்தர்கள் இன்றி நடைபெற்ற ஒரு தேர்த்திருவிழா – Dinaseithigal

பக்தர்கள் இன்றி நடைபெற்ற ஒரு தேர்த்திருவிழா

இலங்கையில் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் உற்சவம் நேற்று காலை நடைபெற்றது. இதில் கொரோனா சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்தவர்களுடன் நல்லூர் உற்சவம் உள்வீதியில் நடைபெற்றிருந்தது. நேற்றைய தினம் விசேட பூஜை வழிபாடு, வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து அந்தணர்களின் வேதங்கள் ஒலிக்க காலை 7.00 மணியளவில் சிறியரக ரதத்தில் ஆலய உள்பிரகாரத்தில் வலம் கொண்டு வரப்பட்டது . இதில் இம்முறை கொரோனா மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இணையவழியில் வழிபாடு நடத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *