தன்னுடைய 62 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் நாகர்ஜுனா – Dinaseithigal

தன்னுடைய 62 வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் நாகர்ஜுனா

தெலுங்கு சினிமாவில் 1967 ல் சுதிகுண்டலு என்ற படத்தில் குழந்தை நடத்திரமாக அறிமுகமான நாகர்ஜுனா, பின்னர் 1986 ல் விக்ரம் என்ற தெலுங்கு படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார். இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தியில் பிரபலமிக்க நடிகராக திகழும் நாகர்ஜுனா 100 க்கும் மேற்பட்ட படங்களில் லீட் ரோலில் நடித்திருக்கிறார் . இந்நிலையில் நாகர்ஜுனா நேற்று தனது 62 வது பிறந்தநாளை கொண்டாடினார் . இதையடுத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து கொண்டனர் . அந்த வகையில் திரை பிரபலங்களான அனில் கபூர், சிரஞ்ஜீவி, சமந்தா, ரம்யா கிருஷ்ணன், குஷ்பு உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *