இந்திய ஆக்கி அணிக்கு 3-வது வெற்றி – அர்ஜென்டினாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேற்றம் – Dinaseithigal

இந்திய ஆக்கி அணிக்கு 3-வது வெற்றி – அர்ஜென்டினாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேற்றம்

டோக்கியோ:

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 8 முறை சாம்பியனான இந்திய அணி ஏ”பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 1-7 என்ற கோல் கணக்கில் மோசமாக தோற்றது. 3-வது ஆட்டத்தில் ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

இந்திய அணி 4-வது ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் அர்ஜென்டினாவை இன்று எதிர்கொண்டது. இதில் இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி பெற்ற 3-வது வெற்றியாகும். இதன் மூலம் கால் இறுதிக்கு தகுதி பெற்றது. 4 ஆட்டத்தில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்திய அணி கடைசி இறுதி ஆட்டத்தில் ஜப்பானை நாளை எதிர்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *