ஒலிம்பிக் வில்வித்தை – அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம் – Dinaseithigal

ஒலிம்பிக் வில்வித்தை – அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்

வில்வித்தை பிரிவில் இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இந்தியாவின் அதானு தாஸ் 2-வது சுற்றில் தென்கொரியாவின் ஜின்யெக் ஓ-வை எதிர்கொண்டார். ஐந்து செட்கள் முடிவில் இருவரும் தலா ஐந்து செட் பாயிண்ட் பெற்று சமநிலை பெற்றனர். இதனால் ஷூட் ஆஃப் பாயிண்ட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் அதானு தாஸ் 10 புள்ளிகள் பெற்றார். தென்கொரிய வீரர் 9 புள்ளிகள் பெற்றார். இதனால் 6-5 என்ற செட் பாயிண்ட் கணக்கில் அதானு தாஸ் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *