இப்போது தொடர் சோதனைக்குள்ளான கேஜிஎஃப் படக்குழு – ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைப்பு – Dinaseithigal

இப்போது தொடர் சோதனைக்குள்ளான கேஜிஎஃப் படக்குழு – ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைப்பு

கன்னடத்தில் 2018ல் வெளியான கேஜிஎஃப் முதல் பாகத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதைவிட அட்டகாசமாக கேஜிஎஃப் பாகம்-2 தயாராகி கொண்டு வருகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது. கேஜிஎஃப் 2 மிரட்டலாக உருவாக்கப்பட்டு புதிதாக பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் தயாராகி வந்த நிலையில் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி போயிருக்கிறது . இந்த கேஜிஎஃப் 2 படமானது ஜூலை 16 ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டதால் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் பண்ண முடியவில்லை. ஆகவே , செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்யலாம் என படக்குழு ஆலோசித்து வந்தது. இந்நிலையில் ஒரேடியாக டிசம்பர் மாதத்திற்கு வெளியீடு தேதியை தள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் கிளம்பியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *