ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு பிரிட்டன் வெளியிட்ட தகவல் – Dinaseithigal

ஆலோசனை கூட்டத்துக்கு பின்பு பிரிட்டன் வெளியிட்ட தகவல்

பிரிட்டன், தமது சமீபத்திய பயண ஆலோசனை அறிக்கையில் , இலங்கையில் தீவிரவாத தாக்குதல்களின் அபாயத்தை குறைத்துக் காட்டியுள்ளது. இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கும் ஆபத்து மிகக் குறைவு மற்றும் குறைந்து வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்த முயற்சிக்கக்கூடும் என்று கடந்த 20 ம் தேதியின் பயண ஆலோசனை குறிப்பில் பிரிட்டன் குறிப்பிட்டிருந்தது. அந்த வகையில் விருந்தகங்கள், சுற்றுலா தளங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் போன்ற வெளிநாட்டினர் செல்லக்கூடிய இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து பயணிகள் நெரிசலான பொது இடங்கள், பெரிய கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களைத் தவிர்க்கவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையை கடைபிடிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *