இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி – இலங்கை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி – Dinaseithigal

இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டி – இலங்கை அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி

கொழும்பு:

இந்திய இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் தவான் – ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். அறிமுக போட்டியில் களமிறங்கிய கெய்க்வாட் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆனர்.

கேப்டன் தவான் ஆட்டம் மந்தமாகவே இருந்தது. அவர் 42 பந்துகளில் 40 ரன்கள் எடுத்த நிலையில் தனஜெயா பந்தில் போல்ட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. அவிக்சா 11, சமராவிக்ரமா 8, சனகா 3, மெண்டீஸ் 2, மினோட் பனகா 36, ஹசரங்கா என வீரர்கள் அடுத்தடுத்த வெளியேறினர். தனஜெயா-கருரத்னே ஜோடி சிறப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். அந்த ஜோடி புவனேஸ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் 12 ரன்கள் எடுத்தது.

இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் அறிமுக பந்து வீச்சாளர் சக்காரியா அந்த ஓவரை வீசினார். கடைசி 2 பந்துகள் மீதம் உள்ள நிலையில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *