தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் – Dinaseithigal

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்

தோப்பு கரணம் போடும் போது நம் காது மடல்களை பிடித்து கொள்கிறோம். அப்போது தான் உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான தூண்டுதல் கிடைக்கும். உட்கார்ந்து எழும்போது காலில் இருக்கக்கூடிய சோலியஸ் எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது. இதனால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.

காதுகளில் தான் இதயம், சிறுநீரகம், மூளை,வயிறு கண்கள் கீழ் மற்றும் மேல்தாடை, ஈரல், காதின் நரம்பு எனப் பல்வேறு உறுப்புகளின் தொடர்பு புள்ளிகள் அமைந்திருக்கின்றன. தோப்புக்கரணம் போடும் போது இந்த எல்லா உறுப்புகளுமே பயனடைகின்றன இதன் மூலம் மூளையின் நியூரான் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. இதனால் நினைவுத்திறன் அதிகரிக்கிறது.

தோப்புக்கரணத்தை தொடர்ந்து போடும் போது மன இறுக்கம், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைவதாக கூறப்படுகிறது. இப்பயிற்சியால் இடுப்பில் இருக்கும் எலும்பு, தசை ஜவ்வு போன்றவை வலுவடைகின்றன. இதனால் இடுப்பு வலி வராமல் தடுக்கலாம். கர்ப்பிணிகள் தோப்புக்கரணம் போடுவதன் மூலம் பிரசவம் எளிதாகும். கர்ப்பப்பையின் சுருங்கி விரியும் தன்மை அதிகரித்து சுகப்பிரசவத்திற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *