உத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்த சிறுமியை அடித்து கொன்ற உறவினர்கள் – Dinaseithigal

உத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்த சிறுமியை அடித்து கொன்ற உறவினர்கள்

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார்.

லூதியானாவில் சிறிது நாட்கள் தங்கியிருந்த அமர்நாத் பஸ்வானின் மனைவி மற்றும் மகள் சொந்த கிராமத்துக்கு திரும்பினார்கள். அப்போது சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த் அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிறுமியை சரமாரியாக தாக்கினார்கள். அவரை அடித்து உதைத்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை ஆட்டோவில் தூக்கி சென்று அங்குள்ள மேம்பாலத்துக்கு கீழே வீசிவிட்டு சென்றனர்.

சிறுமி பிணமாகக் கிடப்பதை பார்த்த சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி சிறுமியை கொன்ற அவரது தாத்தாவையும், உடலை ஏற்றிச்சென்ற ஆட்டோ டிரைவரையும் கைது செய்தனர். சிறுமியை கொலை செய்த மற்ற உறவினர்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *