ஆபாசபடம் தயாரித்த ராஜ்குந்த்ரா : ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பா?

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களையும், மாடல் அழகிகளையும் ஆபாச படங்களில் நடிக்க வைத்து, பணம் சம்பாதித்த பிரபல இந்தி  நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? அல்லது அவருக்கு தெரியாமலேயே ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராஜ்குந்த்ராவுக்கும், ஷில்பா ஷெட்டிக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஷில்பா ஷெட்டி தமிழில் விஜய்யின் குஷி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *