ஓடிடி தளத்தில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் ”பூமிகா”

கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், புதுப் படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பூமிகா’ திரைப்படம் நேரடியாக டி.வி.யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்துக்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் படம் ஒடிடி தளத்தில் வெளியாகிய நிலையில், அவரின் திட்டம் இரண்டு படமும் ஒடிடி தளத்தில் வெளியாகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *