ஸ்ரீசந்த்க்கு ஜோடியாகும் சன்னி லியோன்

சூதாட்டம் காரணமாகதடை விதிக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீர்ர் ஸ்ரீசந்த் தடையில் இருந்து மீண்டு சமீபத்தில் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாடினார். தற்போது கொரோ தொற்று காரணமாக உள்ளூர் போட்டிகள் முடங்கியதால் ஸ்ரீசாந்த், திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே 2 இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார்.

ராதாகிருஷ்ணன் இயக்கும் இந்தப்படத்தில் அவர் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளார். ஸ்ரீசாந்தும் சன்னி லியோனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *