ஷங்கர் படத்தில் இணையும் ராஷ்மிகா

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தற்போது  தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு பிரம்மாண்ட பட்ஜெட்டில்  தயாரிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ராம்சரணுக்கு இரட்டை வேடம் எனவும். ஒருவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒரு நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு நாயகனுக்கு ஜோடியான நடிக்க ராஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம்  செய்ய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *