சூர்யா 40 டைட்டில் என்ன? சிவக்குமாருக்கு தொடர்பு

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். இதுவரை சூர்யா 40 என்று அழைத்து வந்த இப்படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இதற்குமுன் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற தலைப்பில் நடிகர் சிவக்குமார் இரட்டை வேடத்தில் நடித்த படம் 1976 ஆம் ஆண்டு வெளியாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *