சிம்புவின் அடுத்த படத்தின் பணிகள் தொடக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு, தற்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். இவர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து கன்னட மஃப்டி ரீமேக்கான ‘பத்து தல’ என்ற படத்திலும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்திலும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதில் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்று சென்னையில் இந்த படத்தின் போட்டோ ஷூட் நடப்பதாகவும் இதில் சிம்பு கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *