சுரங்கப்பாதையில் சிக்கிய ரயில் : இளப்பளவு தண்ணீரில் பயணிகள் அவதி

பீஜிங்:

சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு இஙடகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் பெரிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு கரைகளை உடைத்து சீறிப்பாய்ந்த ஊருக்குள் புகுந்தது. இந்த திடீர் வெள்ளத்தினால் ஷாப்பிங் மால்கள், பள்ளிகள் மற்றும் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெங்ஜோ நகர சுரங்கப்பாதையில் வெள்ளம் புகுந்ததால் ஏராளமான பயணிகள் சிக்கியுள்ளனர். மின்தடை ஏற்பட்டதால் ரெயில்கள் சுரங்கங்களில் நின்றுவிட்டன. ரெயில்களில் இருந்த மக்கள் இடுப்பளவு தண்ணீரில் தத்தளித்தனர். ஆபத்தான சூழ்நிலையில் மக்கள் தவிக்கும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *