ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு சிலி ஒப்புதல்

மாஸ்கோ:

உலகவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வருகிறது. அந்த வகையில், தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில்  ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல் திறன் கொண்டது எனக் கூறப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது 69- நாடுகளில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  சிலியில் கடந்த 24 மணி நேரத்தில் 996- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *