சரும சுருக்கங்களை போக்கும் பீட்ரூட் பேஸ் பேக்

வயது அதிகரிக்கும்போது சரும சுருக்கங்கள் எட்டிப்பார்க்க தொடங்கும். பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சி, சரும செல்களை உற்பத்தி செய்யவும், மீள் உருவாக்கம் செய்யவும் உதவும். சரும சுருக்கங்கள், கோடுகளை குறைக்கவும் உதவும்.

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் சாறு: 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பால் – கால் டீஸ்பூன்
பால்- ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை: ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாறு, பாதாம் பால், பால் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து கிளறவும். பின்பு அதனுள் பிரஸை முக்கி முகம் முழுவதும் தடவி மசாஜ் செய்துவிடவும். சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிடவும். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் வறண்ட சருமம், பளபளப்புடன் காட்சியளிக்க தொடங்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *