இங்கிலாந்தில் உச்சமடையும் டெல்டா : தினசரி பாதிப்பு 50 ஆயிரமாக உயர்வு

லண்டன்:

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில் தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை கட்ந்து வருகிறது.

அந்த வகையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 44,104-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,63,006- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 73- பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால பலி எண்ணிக்கை 128,896- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,419,868- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 10,14,242- ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *