திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறை குறித்த புகார்களை செல்போனில் தெரிவிக்க ஏற்பாடு

திருப்பதி :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் தேவஸ்தான அறைகளில் தங்கி ஓய்வெடுத்த பின்னர் கோவிலுக்கு வருகிறார்கள். பக்தர்கள் தங்கும் அறைகளில் குறைபாடுகள் உள்ளதாக திருப்பதி தேவஸ்தானத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி, அனைத்துத்துறை அதிகாரிகளுடன் கோகுலம் அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

இந்த கூட்டத்துக்கு பிறகு அவர் கூறியதாவது:- திருமலையில் பக்தர்கள் தங்கும் அறைகள் பதிவு செய்வதற்காக 6 இடங்களில் கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் வாடகை அறை பெறுவது எளிதாகிறது. இந்த அறைகளில் நாற்காலிகள், மேஜைகள், கட்டில் மெத்தைகள், குழாய்களில் நீர்வரத்து, மின்விசிறி பழுது தொடர்பாக பக்தர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

பக்தர்கள் இது குறித்த புகார்களை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தெரிவிக்க எஸ்.எம்.எஸ் வசதி அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான செல்போன் எண் விரைவில் வெளியிடப்படும். அதில் ‘கம்ப்ளைன்ட் டிராக்கிங் சிஸ்டம்’ இணைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *