கொரோனா தொற்றுக்கு 1.19 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்ததாக தகவல்

வாஷிங்டன்:

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவரமடைந்து வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கையில், அமெரிக்கா இந்தியா பிரேசில் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்நிலையில், தற்போது உலகம் கொரோனா பாதிப்பு குறித்து நடத்திய ஆய்வில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலின் முதல் 14 மாதங்களில் 1.19 லட்சம் இந்திய குழந்தைகள் தங்கள் பராமரிப்பாளர்களை கொரோனாவுக்கு பறி கொடுத்து பரிதவிப்பில் உள்ளனர். இதில் இந்தியாவில் மட்டுமே 25 ஆயிரத்து 500 குழந்தைகள் தங்கள் தாய்மாரை கொரோனாவால் இழந்துள்ளனர். 90 ஆயிரத்து 751 குழந்தைகள் தங்கள் தந்தைமாரை பறிகொடுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *