யாரும் எவ்விதமான போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் – எடியூரப்பா

பெங்களூரு:

கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ்.எடியூரப்பா பதிவிட்ட டுவிட்டர் பதிவில்:- பாஜகவின் உண்மையான தொண்டாக இருப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். நான் சார்ந்த கட்சிக்கு சேவை செய்வது எனது மிகப்பெரிய கடமை. கட்சிக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் நடந்துகொள்ளுமாறு வேண்டுகிறேன். யாரும் எவ்விதமான போராட்டத்திலோ இல்லை மரியாதைக் குறைவான செயல்களிலோ ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளது. இவ்வாறு எடியூரப்பா பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *