டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கொரோனா பாதிப்பை தடுக்க முடியாது : உலக சுகாதாரத்துறை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. ஆனால் தற்போது ஒம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தங்கியிருக்கும் ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனால் ஒலிம்பிக் தொடரில் கொரோனா பாதிப்பை தடுக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், ஒலிம்பிக் போட்டியில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க முடியாது என, உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொரோனா பாதிப்பு புள்ளி விபரத்தின் மூலம், ஒலிம்பிக் போட்டியில் வைரஸ் பாதிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. வைரஸ் பிரச்னையை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம்.

விளையாட்டு வீரர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை விரைவாக அடையாளம் கண்டு, தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்தலாம். உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் டெல்டா மாறுபாட்டை விட அதிக பரவல் கொண்டதும், ஆபத்து நிறைந்ததுமான மற்றுமொரு மாறுபாட்டை மனிதகுலம் விரைவில் பார்க்கக்கூடும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *