தமிழகத்தில் 3 நாட்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் 3 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இருக்காது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பதால் பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை.

இந்தியாவிலேயே முதன்முறையாக சி.எஸ்.ஆர் நிதி மூலம் தனியார் மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் மேலும் விரிவுப்படுத்தப்படும்.

தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் 2 கோடியை நெருங்கி வருகிறது. தனியார் மருத்துவமனைகள், தன்னார்வலர்கள் ஒன்றிணைவதால் கூடுதல் தடுப்பூசிகள் செலுத்த முடியும். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்பது உண்மை தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *