ரத்தினகிரி அருகே மணல் கடத்தியவர் கைது

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலாற்றுப் படுகையில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மணலை மூட்டைகளாக கட்டிக்கொண்டு வேனில் அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர். இதனைக் கண்ட போலீசார் மணல் மூட்டை மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மாங்குப்பம் பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் பார்த்திபன் (வயது 21) என்பவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *