திருமயம் அருகே பெண்களிடம் சங்கிலி பறித்த 2 பேர் கைது

திருமயம்:

திருமயம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் மதுரை மாவட்டம் கீழவளவு பகுதியை சேர்ந்த அய்யனார் (வயது 29), அழகர் (38) என தெரியவந்தது. மேலும் அவர்கள். திருமயம், கல்லல், அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் தனியாக சென்ற பெண்களை தாக்கி நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து அவரிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலியை மீட்டனர். மேலும் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *