தீவிர பயிற்சியில் விராட்கோலி : பிசிசிஐ வெளியிட்ட வீடியோ

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் ஆகஸ்டு 4-ந்தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து உள்ளூர் அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் அஜின்க்யா ரஹானே காயம் காரணமாக ஆட்டத்தில் விளையாடவில்லை. இதனால், ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில், ஆட்டத்தின் 2-வது நாள் உணவு இடைவேளையில் இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதன் வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *