தமிழ்நாடு பிரிமீயர் லீக் 3-வது ஆட்டம் : திருச்சி அணி வெற்றி

சென்னை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. முதல் இரு ஆட்டங்கள் மழையால் ரத்தான நிலையில் 3-வது லீக்கில் நேற்றிரவு நெல்லை ராயல் கிங்ஸ்- திருச்சி வாரியர்ஸ் மோதின.

இதில் ‘டாஸ்’ ஜெயித்த நெல்லை கேப்டன் பாபா அபராஜித் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த திருச்சி அணி  20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 151 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நெல்லை அணி 13.4-ஓவர்களில் 77 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததால் திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *