லிங்குசாமி படத்தில் ஆதிக்கு 4 கோடி சம்பளம்

இயக்குநர்  லிங்குசாமி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் ராம் பொதினேனி நாயகனாக நடிக்க, படத்தில் வில்லன் வேடத்தில் ஆதி நடிக்க உள்ளார். கதையில் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருப்பதால் வில்லனாக நடிக்க ஆதி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஆதிக்கு ரூ.4 கோடி சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பெரிய தொகை என்று திரையுலகினர் வியக்கின்றனர். மிருகம் படம் மூலம் பிரபலமான ஆதி ஈரம், அய்யனார், ஆடுபுலி. அரவான், யூ டர்ன், உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தமிழில் 2 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *