பாலா இயக்கத்தில் சூர்யா?

சூரரைப்போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’, வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில், அடுத்து நடிகர் சூர்யா, இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இதுகுறித்த அறிவிப்பு சூர்யா பிறந்தநாளன்று வெளியாகவும் இருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகர் சூர்யா ஏற்கனவே பாலா இயக்கத்தில் நந்தா, பிதாமகன் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *