July 21, 2021 – Dinaseithigal

புன்செய்புகளூர் பேரூராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம்

வேலாயுதம்பாளையம்: புன்செய்புகளூர் பேரூராட்சி மாத்யூ நகரில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மக்களுக்கு சளி மாதிரி எடுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Read More

கர்ப்ப காலமும் இரும்பு சத்தின் அவசயமும்

கர்ப்ப காலமும் இரும்பு சத்தின் தேவையை அதிகரிக்க செய்துவிடுகிறது. கருவறையில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு ரத்தத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனை நிவர்த்தி செய்வதற்கு இரும்பு சத்து துணை புரிகிறது. பிரசவத்தின்போது எதிர்கொள்ளும் ரத்த இழப்பை ஈடு செய்ய இரும்பு சத்து தேவைப்படுகிறது. மாதவிடாய் காலகட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரத்த இழப்பு உண்டாகும். அது உடலில் ஒட்டுமொத்த இரும்பு உள்ளடக்கத்தை பாதிக்கும். ரத்தத்தை மீண்டும் நிரப்புவதற்கு இரும்பு சத்து அதிகமாக தேவைப்படும். அதனால் பெண்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எப்போதும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்”

Read More

மூளையின் திறனை அதிகரிக்கும். பிரோக்கோலி

நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் பிராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. கால்சியம், வைட்டமின் கே இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். பிராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையைச் சரிசெய்யும். இளநரை வருவதைத் தடுக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைத்திருக்கும். மூளையின் திறனை அதிகரிக்கும். பிரோக்கோலியில் மக்னீசியம் நிறைந்துள்ளது, இது நினைவாற்றலைத் தக்கவைப்பதில் உதவுகிறது.

Read More

நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலம் கொடுக்கும் பட்டாணி

உடல் ஒல்லியாய் இருப்பவர்கள், நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும். நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப் பட்டாணி. எனவே, தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள். இதனால் இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது. ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Read More

ஜூலை 21, வரலாற்றில் இன்றைய நிகழ்வுகள்

கிமு 356 – ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றான கிரேக்கக் கோயில் ஆர்ட்டெமிஸ் கோயில் தீவைத்துக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டது. 230 – முதலாம் அர்பனுக்குப் பின்னர் போந்தியன் 18-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 365 – கிரேக்கத்தின் கிரேட்டு தீவில் பெரும் நிலநடுக்கம், ஆழிப்பேரலை  ஏற்பட்டதில், லிபியா, அலெக்சாந்திரியாவில் பெரும் சேதம் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 905 – இத்தாலியின் மன்னர் முதலாம் பெரெங்கார் அங்கேரியில் இருந்து தருவிக்கப்பட்ட கூலிப்படைகளுடன் இணைந்து வெரோனா நகரில் பிரான்சியப் படைகளைத் தோற்கடித்தனர். பிரான்சின் மூன்றாம் லூயி கைது செய்யப்பட்டு, குருடாக்கப்பட்டார்.[1] 1545 – ஆங்கிலக் கால்வாயில் வைட்டுத் தீவில் பிரெஞ்சுப் படைகள் முதல் தடவையாகத் தரையிறங்கின.

Read More

உருசியாவும் உதுமானியப் பேரரசும் போரை முடிவுக்கு கொண்டு வந்த நாள்

1718 – உதுமானியப் பேரரசு, வெனிசுக் குடியரசு, ஆத்திரியா ஆகியவற்றுக்கிடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. 1774 – உருசியாவும் உதுமானியப் பேரரசும் தமது ஏழாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தன. 1798 – நெப்போலியனின் படைகள் உதுமானிய-மம்லூக் படைகளை கெய்ரோ அருகில் நடந்த போரில் வென்றன. 1831 – பெல்ஜியத்தின் முதலாவது மன்னர் முதலாம் லெப்பால்ட் முடிசூடினார். 1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: வர்ஜீனியாவில் இடம்பெற்ற முக்கியமான போரில் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது. 1907 – கலிபோர்னியாவில் கொலம்பியா பயணிகள் கப்பல் சான் பெத்ரோ கப்பலுடன் மோதியதில் 88 பேர் உயிரிழந்தனர். 1919 – வான்கப்பல் ஒன்று சிகாகோவில் கட்டடம் ஒன்றுடன் மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

Read More

இரண்டாம் உலகபோர் முக்கிய நிகழ்வுகள் ஜூலை 21

1925 – அமெரிக்காவில் டென்னிசி மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளி ஒன்றில் படிவளர்ச்சிக் கொள்கையை வகுப்பில் கற்பித்தமைக்காக ஆசிரியர் ஒருவருக்கு $100 தண்டம் அறவிடப்பட்டது. 1944 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படைகள் குவாமில் தரையிறங்கி சப்பானியப் படைகளுக்கெதிராகத் தாக்குதலை ஆரம்பித்தனர் (ஆகத்து 10 இல் இது நிறைவடைந்தது). 1944 – இரண்டாம் உலகப் போர்: சூலை 20 இல் இட்லரை கொலை செய்யத் திட்டமிட்டவர்கள் பெர்லினில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1952 – கலிபோர்னியாவின் தெற்கே 7.3-அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். 1954 – ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் வடக்கு வியட்நாம், தெற்கு வியட்நாம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1960 – சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றார். உலக நாடொன்றின் முதலாவது பெண் அரசுத்தலைவர் …

Read More

 சிங்கப்பூரில் மலாய் மற்றும் சீனர்களுக்கிடையே கலவரம் ஜூலை 21

1961 – மனிதரை விண்ணுக்கு அனுப்பும் நாசாவின் திட்டத்தில் இரண்டாவது பயணம் மேர்க்குரி-ரெட்ஸ்டோன் 4. கஸ் கிரிசம் என்பவர் விண்வெளிக்குப் பயணம் சென்றார். 1964 – சிங்கப்பூரில் மலாய் மற்றும் சீனர்களுக்கிடையே கலவரம் மூண்டதில் 23 பேர் உயிரிழந்து பலர் காயமடைந்தனர். 1969 – நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழைப் பெற்றார். 1970 – 11 ஆண்டுகளின் பின்னர் எகிப்தில் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்பட்டது. 1972 – வட அயர்லாந்து தலைநகர் பெல்பாஸ்ட்டில் ஐரியக் குடியரசுப் படையினர் நடத்திய 22 தொடர் குண்டுவெடிப்புகளில் 9 பேர் கொல்லப்பட்டு 130 பேர் காயமடைந்தனர். 1976 – அயர்லாந்துக்கான பிரித்தானியத் தூதுவர் ஐரியக் குடியரசுப் படையினரால் கொல்லப்பட்டார்.

Read More

நாசாவின் விண்ணோடத் திட்டம் நிறைவு பெற்ற நாள் ஜூலை 21

1977 – நான்கு நாட்கள் நீடித்த லிபிய-எகிப்தியப் போர் ஆரம்பமானது. 1983 – குடியிருப்புப் பகுதி ஒன்றில் உலகின் மிகக்குறைந்த வெப்பநிலை −89.2 °C (−128.6 °F) அந்தாட்டிக்காவில் வசுத்தோக் நிலையத்தில் பதியப்பட்டது. 1995 – சீனக் குடியரசின் வடக்குப் பக்கக் கடற்பகுதி மீது மக்கள் விடுதலை இராணுவம் எறிகணைகளை வீசியது. 2001 – சப்பான், ஒக்கூராவில் பாதசாரிகளின் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர். 2008 – ராம் பரன் யாதவ் நேப்பாளத்தின் முதலாவது குடியரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 – நாசாவின் விண்ணோடத் திட்டம் அட்லாண்டிசு தரையிறங்கியதுடன் நிறைவு பெற்றது.

Read More

ஜூலை 21, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1515 – பிலிப்பு நேரி, இத்தாலியக் கத்தோலிக்கப் புனிதர் (இ. 1595) 1620 – ழீன் பிக்கார்டு, பிரான்சிய வானியலாளர் (இ. 1682) 1654 – பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய கத்தோலிக்கர், மறைபணியாளர் (இ. 1672) 1899 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (இ. 1961) 1911 – மார்ஷல் மெக்லுன், கனடிய மெய்யியலாளர் (இ. 1980) 1911 – எஃப். எக்ஸ். சி. நடராசா, ஈழத்து எழுத்தாளர் 1917 – க. சண்முகம்பிள்ளை, ஈழத்து மிருதங்கக் கலைஞர் (இ. 2010)

Read More