July 2021 – Dinaseithigal

இந்தோனேசியாவில் 30 லட்சத்தை கடந்த கொரோனா தொற்று

  உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவில் நேற்று ஒரே நாளில் 37,284 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,808 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 94 ஆயிரத்தைத் தாண்டியது. கொரோனாவில் இருந்து 27.70 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், 5.45 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

தமிழகத்தில் இன்று 1,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இன்று 1,986- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,59 ஆயிரத்து 597- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பைக் கண்டறிய 1 லட்சத்து 60 ஆயிரத்து 171- மாதிரிகள் இன்று பரிசோதிக்கப்பட்டுள்ளன.  சென்னையில் இன்று 204- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read More

சீனாவில் மேலும் 55 பேருக்கு கொரோனா தொற்று

சீனாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 92,930 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636  பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மராட்டியத்தில் புதிதாக 6,959-பேருக்கு கொரோனா கொரோனா தொற்று

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  6,959-பேருக்கு கொரோனா கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7,467 ஆக உள்ளது.மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 76,755- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் சதவிகிதம் 96.2 சதவிகிதமாக உள்ளது.

Read More

கர்நாடகாவில் மேலும் 1,987- பேருக்கு கொரோனா தொற்று

ர்நாடகாவில் மேலும் 1,987- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 1,632- பேர் குணமடைந்துள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை  28 லட்சத்து 44 ஆயிரத்து 742 ஆக உள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் 23,796-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  தொற்று பாதிப்பு காரணமாக 36,562- பேர்  இதுவரை உயிரிழந்துள்ளனர்.  

Read More

கேரளாவில் புதிதாக 20,624 பேருக்கு கொரோனா தொற்று

கேரளாவில் கொரோனா தொற்றிள் தாக்கம் நாளுக்கு நாள் திரமடைந்து வரும் நிலையில், இன்று ஒரேநாளில் 20,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மலப்புரத்தில் 3,474 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,64,500 பேர்  சிகிச்சையில் உள்ளனர். கொரோனாவுக்கு இன்று 80 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 16,781ஆக உயர்ந்துள்ளது.

Read More

டெல்லியில் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி, டெல்லியில்  புதிதாக 58 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,36,265 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் 56 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் மட்டுமே நோய்த் தொற்று பலியாகியுள்ளார். இதுவரை மொத்தம் 14,10,631 பேர் குணமடைந்துள்ளனர். 25,053 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்புடன் 581-பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Read More

பேட்மிண்டன் அரையிறுதியில் பிவி.சிந்து அதிர்ச்சி தோல்வி

டோக்கியோ, டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை டாய் சூ- யிங்கை எதிர்த்து விளையாடிய இந்தியாவின் பி.வி சிந்து இந்தப்போட்டியில்  21-18,  21-12 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதனால் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த அவர்,  வெண்கல பதக்கப்போட்டியில் சீனாவின் ஹி பிங்யாஜிவோவை  பிவி சிந்து எதிர்கொள்கிறார்.

Read More

நவரசா படத்தில் நான் யார்? அதர்வா முரளி வெளியிட்ட ரகசியம்

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் நடிகர் அதர்வா விரைவில் வெளியாகவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குனர் சர்ஜுன் இயக்கியுள்ள “துணிந்த பின்” கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி ‘வெற்றி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இயக்குனர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த …

Read More

கமல் படத்தில் இணைந்த ஜெயராம் மகன்

மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குந லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் எண்ணும் படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் விக்ரம் படத்தில் இணைந்திருக்கிறார்.  இதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதிபடுத்தி இருக்கிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக காளிதாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Read More