யாழ். மாநகர முதல்வருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் – Dinaseithigal

யாழ். மாநகர முதல்வருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்

இலங்கையில் யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் நேற்று முந்தினம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 25 ம் தேதி நடைபெற்ற யாழ். மாநகர சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனை நோக்கி “நாய்” என அழைத்து பேசியதாக மற்றுமொரு மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தை ஒரு மாத காலத்திற்கு சபை அமர்வில் பங்கேற்று கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்கும் நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தடை, சட்டத்திற்கு முரனானது எனக் குறிப்பிட்டு வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில் மாநகர சபை உறுப்பினர் ஜெ.ரஜீவ்காந்தால் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *