பேரூராட்சியில் பணிபுரியும் முன்களப்பணியாளர்கள் சுமார் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி – Dinaseithigal

பேரூராட்சியில் பணிபுரியும் முன்களப்பணியாளர்கள் சுமார் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள கூடுதல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வக்கீல்களுக்கும், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் முன்களப்பணியாளர்கள் என சுமார் 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள பலரும் ஆர்வமுடன் காத்திருந்து தனிமனித இடைவெளியுடன் நின்று செலுத்திக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *