கோவை அருகே குளியல் அறையில் தவறி விழுந்த முதியவர் மரணம் – Dinaseithigal

கோவை அருகே குளியல் அறையில் தவறி விழுந்த முதியவர் மரணம்

கோவை வடவள்ளி அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த ஜெய்சங்கர், பெல்நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் குளியலறைக்கு சென்றபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். நீண்டநேரமாகியும் ஜெய்சங்கர் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் குளியலறைக்கு சென்று பார்த்தனர். அங்கு தலையில் பலத்த காயத்துடன் ஜெய்சங்கர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜெய்சங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *