பெண்களுக்கு நீரிழிவு நோய் தாக்கம் அதிகமாகிருப்பது ஏன் ? – Dinaseithigal

பெண்களுக்கு நீரிழிவு நோய் தாக்கம் அதிகமாகிருப்பது ஏன் ?

நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான அபாயமும் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் நோய் தாக்கத்தின் தன்மை அதிகம் இருக்கும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் கருத்துப்படி, உலகம் முழுவதும் 41 கோடியே 50 லட்சம் பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அவர்களில் 19 கோடியே 90 லட்சம்பேர் பெண்கள். 2017-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 7 கோடியே 20 லட்சம் பேர் நீரிழிவு பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 8.8 சதவீதமாகும். டைப் -1 நீரிழிவு நோயுடன் ஒப்பிடும்போது ஆண்களை விட பெண்களுக்கு இதய செயலிழப்புக்கான அபாயம் 47 சதவீதம் அதிகமாக இருக்கிறது. அதேவேளையில் டைப்-2 நீரிழிவு நோய் பாதிப்புக்குள்ளான பெண்களில் 9 சதவீதம் பேருக்கு ஆண்களைவிட இதய செயலிழப்புக்கான அபாயம் அதிகம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *