உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை இந்திய வீரர்கள் வெல்லுவார்கள் என்று நம்புகிறேன் – சவுரவ் கங்குலி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலி ஆலோசனை கூறி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் கோப்பையை இந்திய வீரர்கள் வெல்லுவார்கள் என்று நம்புகிறேன். ஆனால் நியூசிலாந்து அணியின் தரம் மற்றும் திறமையை கருத்தில் கொள்ளும்போது அது எளிதாக இருக்காது. இந்தியாவின் சிறந்த வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை பார்த்தால் நாம் முதலில் பேட்டிங் செய்யும் போது எப்போதும் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். 2002-ம் ஆண்டு லீட்ஸ் அல்லது 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலையில் நாம் முதலில் பேட்டிங் செய்தோம். ஆரம்ப அழுத்தத்தை சமாளித்து ரன்களை எடுத்தோம். அப்படிதான் அந்த போட்டிகளில் வென்றோம். காலை வேளையில் மேக மூட்டமாக இருந்தாலும் இந்திய அணி டாஸ் ஜெயித்தால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும். அதுதான் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் அணிக்கு சிறப்பாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன்கில் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும். அவர்கள் குறைந்தது 20 ஓவர்களாவது பேட்டிங் செய்ய வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *