மேற்கத்திய நடனக்காரரை போல் செம்ம ஆட்டம் போடும் சுரேஷ் தாத்தா – Dinaseithigal

மேற்கத்திய நடனக்காரரை போல் செம்ம ஆட்டம் போடும் சுரேஷ் தாத்தா

பிரபல டிவி சேனலில் இடம்பெற்ற பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பேமஸ் ஆனவர் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி. ஏற்கனவே தமிழ், தெலுங்கு என பல திரைப்படங்களில் நடித்துள்ள சுரேஷ் சீரியல்களிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி தற்போது ஷேர் செய்துள்ள வீடியோ ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதில் ஆர் யூ ரெடி? என்ற கேப்ஷனுடன் இசைக்கு ஏற்ப புருவம், கண்கள், வாய் என அசைத்து பிரமாதமான பர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கிறார் சுரேஷ். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள், தாத்தா சூப்பர், வேற லெவல் என புகழ்ந்து கொண்டு வருகின்றனர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் சுரேஷ் சக்கரவர்த்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *