யூரோ கோப்பை கால்பந்து – ஆஸ்திரியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இன்று அதிகாலை நடந்த போட்டியில் குரூப் சி பிரிவில் நெதர்லாந்து, ஆஸ்திரியா அணிகள் மோதின. முதல் பாதியின் 11-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் டெபே முதல் கோலை அடித்தார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 67-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் டென்சல் டம்டிரிஸ் ஒரு கோல் அடித்தார். இறுதியில், நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *