June 18, 2021 – Dinaseithigal

தேவகோட்டை பகுதியில் ஊரடங்கு விதி மீறிய கடைகளுக்கு சீல் வைப்பு

தேவகோட்டை: தேவகோட்டை பகுதியில் கொரோனா ஊரடங்கு விதிமுறையை மீறியும், சமூக இடைவெளி இன்றியும் 3 ஜவுளி கடைகள், 2 நகை கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு உள்ளன. இதையடுத்து தேவகோட்டை தாசில்தார் ராஜரத்தினம், நகர் போலீசார் அங்கு சென்று கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Read More

அரிமளம் ஒன்றியத்தில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

அரிமளம்: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் நேற்று 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது . அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read More

பாப்பான்பட்டி அருகே பெண்னிடம் நகை பறிப்பு

அரிமளம்: புதுக்கோட்டை மாவட்டம் பாப்பான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (55) இவருடைய மனைவி கலையரசி. இவர்கள் இருவரும் வீட்டின் முன் பகுதியில் உள்ள கார் நிறுத்தும் இடமான போர்டிகோவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் கலையரசி கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்துக் கொண்டு தைல மர காட்டுப் பகுதிக்குள் புகுந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கார்த்திக் மற்றும் கிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட …

Read More

கே.புதுப்பட்டி அருகே பெண்னிடம் 2½ பவுன் சங்கிலி பறிப்பு

அரிமளம்: புதுக்கோட்டை மாவட்டம், கே.புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு அறையிலும், இவருடைய தாய் ரெத்தினம் மற்றொரு அறையிலும் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தனர். அவர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் கார்த்திக் மனைவி கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

Read More

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 226 பேர் கொரோனா பாதிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 226 பேர் கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 8 ஆயிரத்து 863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 794 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,428 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,641 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் இறந்துள்ளனர்.

Read More

தமிழகத்தில் புதிதாக 8,633 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 8,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 06 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 89,009 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 19,860 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 86 ஆயிரத்து 653 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 287 பேர் உயிரிழந்துள்ளனர். …

Read More

மகள் கதையை பகிர்ந்த நடிகர் பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜ் தனது தனது சமூக வலைத்தள பக்கத்தில், தன் மகள் சிலேட்டில் எழுதிய ஒன்லைன் கதையை பகிர்ந்தார். இந்தக் கதை 2-ஆம் உலகப் போரின் பின்னணியில் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தந்தை-மகன் இரட்டையரைப் பற்றியது. “இந்த லாக்டவுனில் நான் கேட்ட சிறந்த ஒன்லைன் கதை இது. ஆனால் ஒரு பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் இதைப் படமாக்குவது சாத்தியமற்றது என்று தோன்றியதால், நான் மற்றொரு ஸ்கிரிப்டைத் தேர்ந்தெடுத்தேன். ஆம், மீண்டும் கேமராவுக்குப் பின்னால் செல்ல இருக்கிறேன். விவரங்கள் விரைவில் வெளியாகும்” என்று தனது அடுத்தப் …

Read More

விவாகரத்துக்குப் பிறகு திருமண நாளில் ஒன்று சேர்ந்த ரஞ்சித் – பிரியா ராமன்

நேசம் புதுசு திரைப்படத்தில் ஜோடியாக நடித்த ரஞ்சித் மற்றும் பிரியா ராமன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்று கடந்த 15 வருடங்களாக தனியாக வாழ்ந்து வருகின்றனர். இருவரும் தங்களது திருமண நாளை முன்னிட்டு சமூக வலை தளங்களில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து மாறி மாறி இருவரும் வாழ்த்துக்களை கூறிக் கொண்டுள்ளனர். திருமண நாளில் ஒன்று சேர்ந்த இந்த ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Read More

தளபதி 65 படத்தின் மாஸ் அப்டேட்… ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21 ஆம் தேதி மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்கான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக …

Read More

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாஸான போஸ்டரை வெளியிட்ட பிரபல தயாரிப்பாளர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்த படம் மாஸ்டர். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தை நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர். வருகிற ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் இதுவரை நடித்த 64 படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து …

Read More