இன்று பிறந்தநாள் கொண்டாடும் இளையராஜாவை வாழ்த்திய இயக்குனர் பாரதிராஜா

தமிழ் சினிமாவில் மூத்த இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா இன்று தனது 78வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து இளையராஜாவின் நெருங்கிய நண்பரும் இயக்குநருமான பாரதிராஜா நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து இசை ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் இசை உலக கலைஞரை சமூக வலைதளங்களில் வாழ்த்தி கொண்டு வருகின்றனர். இசைஞானி இளையராஜா 1943ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி பண்ணைப்புரத்தில் பிறந்தார் . காலம் சென்ற திமுக தலைவர் கருணாநிதி மீது கொண்ட அளவு கடந்த அன்பின் காரணமாக அவரது பிறந்தநாளில் தானும் பிறந்தநாள் கொண்டாடுவது சரியாக இருக்காது என ஒரு நாள் முன்னதாக ஜூன் 2ம் தேதி தனது பிறந்தநாளை பல வருடங்களாக அவர் கொண்டாடி கொண்டிருக்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *