May 2021 – Page 2 – Dinaseithigal

மே 31, இன்றைய தினத்தில் பிறந்த முக்கிய பிரமுகர்கள்

1725 – அகில்யாபாய் ஓல்கர், மராட்டியப் பேரரசின் கீழிருந்த மல்வா இராச்சியத்தின் அரசி (இ. 1795) 1819 – வால்ட் விட்மன், அமெரிக்கக் கவிஞர், ஊடகவியலாளர் (இ. 1892) 1852 – ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி, செருமானிய நுண்ணுயிரியலாளர் (இ. 1921) 1912 – சியான்-ஷீங் வு, சீன-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1997) 1912 – மார்ட்டின் சுவார்சுசைல்டு, செருமானிய-அமெரிக்க வானியற்பியலாளர் (இ. 1997) 1919 – எம். ஐ. எம். அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (இ. 1970) 1930 – கிளின்ட் ஈஸ்ட்வுட், அமெரிக்க நடிகர், இயக்குநர் 1931 – நீலாவணன், ஈழத்துக் கவிஞர் (இ. 1975) 1941 – வில்லியம் நோர்டவுசு, நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் 1945 – லோரண்ட் பாக்போ, ஐவரி கோஸ்ட்டின் 4வது அரசுத்தலைவர் 1948 – சிவெத்லானா அலெக்சியேவிச், நோபல் பரிசு பெற்ற …

Read More

மே 31, இன்றைய தினத்தில் இறந்த முக்கிய பிரமுகர்கள்

1809 – ஜோசப் ஹேடன், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1732) 1832 – எவரிஸ்ட் கால்வா, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1811) 1910 – எலிசபெத் பிளாக்வெல், ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர் (பி. 1821) 1960 – டி. பி. ஜாயா, இலங்கை அரசியல்வாதி, கல்வியாளர் (பி. 1890) 1964 – பி. ஆர். மாணிக்கம், தமிழகக் கட்டிடக் கலைஞர் (பி. 1909) 1973 – மோகன் குமாரமங்கலம், இந்திய அரசியல்வாதி (பி. 1916) 1976 – ஜாக்குவஸ் மோனாட், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய உயிரியலாளர் (பி. 1910) 1981 – பார்பரா வார்ட், ஆங்கிலேயப் பொருளியலாலர், ஊடகவியலாளர் (பி. 1914) 1987 – ஜான் ஆபிரகாம், இந்தியத் திரைப்பட இயக்குநர் (பி. 1937) 2000 – அ. ஜெ. வில்சன், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர் (பி. 1928) 2004 – ஐயாத்துரை …

Read More

பார்லியின் மருத்துவ பயன்கள்

பார்லியில் எல்லா வகையான புற்றுநோய்களையும் தடுக்கக்கூடிய ஆற்றல் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக பார்லியை உணவாக அதிகம் பயன்படுத்தும் சீனாவில் உள்ள யுனான் மற்றும் திபத்திய பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு எந்த வகையான புற்று நோய் பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பார்லியில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்று மற்றும் மார்பகப் புற்று நோய்களை தடுப்பதுடன், நோயின் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நோய் குறைப்பதிலும் சிறப்பாக பார்லி செயல்படுகிறது. செரிமான பிரச்சனைகள், மலச்சிக்கல் கொண்டவர்களுக்கு சிறந்த பத்திய உணவு பார்லி ஆகும். பார்லி கொண்டு …

Read More

சாத்துக்குடி பழத்தை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை உணவிற்கு பதிலாக சாத்துக்குடி ஜுஸ் குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைந்து உடல் ஆரோக்கியமடையும். உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்கள் சாத்துக்குடி ஜூஸினை அடிக்கடி எடுத்துக்கொண்டு வந்தால் நீர்ச்சத்து அதிகரித்து உடல் புத்துணர்வுடன் காணப்படும். நீர்க்கடுப்பு பாதிப்பு உள்ளவர்கள் சாத்துக்குடி பழத்தினை சாப்பிட்டு வர நீர்க்கடுப்பு சரியாகிவிடும். உடல் சூட்டினால் ஏற்படும் பாதிப்பை சரி செய்ய அடிக்கடி சாத்துக்குடி பழ ஜூஸினை அடிக்கடி சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இப்பழத்தினை …

Read More

இலங்கை முன்னாள் பிரதமர் தெரிவிக்கும் சிறப்பு தகவல்

இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் தொடர்பாக பொதுக் கொள்கை அடிப்படையிலான புதிய சட்ட மூலம் இயற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார் . மேலும் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையினால் இந்தச் சட்ட மூலம் உருவாக்கப்பட்டு அது தொடர்பாக அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்காத மற்ற கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார் . போன வருடம் நவம்பர் மாதம் தடுப்பூசி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்த போதிலும் , …

Read More

தொடர்ந்து கொரோனாவுக்கு பலியான 36 பேர் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்த தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தி கொண்டுள்ளார் . இதன்பிரகாரம் , நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,441 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இதுவரையில் 2,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது .

Read More

பீகாரில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் கொரோனா வைரசின் 2வது அலை வேகமாக பரவியதையடுத்து, கடந்த 5ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ளது. எனினும், தினசரி தொற்று சுமார் 1500 என்ற அளவில் இருப்பதால் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 8ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் நிதிஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் வணிகங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக கூறி உள்ளார்.

Read More

அதியுச்சத்தில் பரவும் கொரோனா தொற்று – வெளியான புதிய பாதிப்பு எண்ணிக்கை

நேற்று இலங்கையில் மேலும் 663 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறியுள்ளார் . நேற்று மாலை வெளியான கொரோனா அறிக்கையின்படி 2,186 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று வரையில் 2, 849 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து இலங்கையில் இதுவரையில் 183, 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களில் 1,405 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

Read More

இந்தோனேசிய கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல் – வெளியான பரபரப்பு தகவல்

இந்தோனேசிய தீவில் உள்ள சனானா துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் கப்பல் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன . இதில் கே,எம். கர்யா இந்தாஹ் என்ற கப்பலிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது இந்த கப்பலில் 275 பேர் வரையில் பயணித்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீயை அடுத்து அதில் பயணித்த 275 பேரில் 274 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 43 வயதான ஒருவர் மட்டும் காணாமல் போயுள்ளதாக சொல்லப்படுகின்றது.

Read More

மூதாட்டியை கொலை செய்த நபர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கைது

இலங்கையில் தெல்லிப்பழையில் வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்தில் இரண்டு வருடங்களாக தலைமறைவாகியிருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் மானிப்பாய் பகுதியில் வைத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 25 வயதுடைய அவர் இரண்டு வருடங்களாக புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நிலையில் மானிப்பாய்க்கு வருகை தந்திருந்த நிலையில் காங்கேசன்துறை காவல் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சி.நிதர்சன் தலைமையிலான அணியினர் கைது செய்துள்ளனர் . கடந்த 2019 ம் ஆண்டு மே 6 ம் தேதி தெல்லிப்பழை மகாதனையைச் சேர்ந்த …

Read More