வேப்ப எண்ணெய் மருத்துவ நன்மைகள் – Dinaseithigal

வேப்ப எண்ணெய் மருத்துவ நன்மைகள்

நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய உறுப்பு கல்லீரல் ஆகும். வேம்பம் பூ மற்றும் வேப்ப எண்ணெய்யை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு 5 கிராம் உலர்ந்த வேப்பம் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு, அதனுடன் சில துளிகள் வேப்ப எண்ணெய் சேர்த்து மூடி வைத்திருந்து வடிகட்டிச் குடித்து வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி போன்றவை நீங்கி கல்லீரல் நன்கு இயங்கும்.

வேப்ப எண்ணெய் காயங்களை விரைவில் ஆற்றும். மழைக்காலங்களில் சேற்றில் இருக்கும் கிருமிகளினால் சிலருக்கு தொற்று ஏற்பட்டு சேற்றுப்புண்கள் ஏற்படுகின்றன. ஷூ, காலணிகள் போன்றவை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பாதங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு படர் தாமரை போன்றவையும் ஏற்படுகின்றன. இவற்றை சீக்கிரம் குணமாக்க தினமும் சிறிது வேப்ப எண்ணையை பாதிக்கபட்ட இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில் அனைத்து வித காயங்களும் ஆறிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *