மே 31, இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வுகள் – Dinaseithigal

மே 31, இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வுகள்

455 – உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார்.

1223 – செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது.

1293 – சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர்.[1][2]

1669 – சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார்.

1790 – ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமுலாக்கியது.

1859 – வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பிக் பென் மணிக்கூண்டுக் கோபுரம் இயங்க ஆரம்பித்தது.

1889 – அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *