எம்பி பதவியை ராஜினாமா செய்த முனுசாமி, வைத்தியலிங்கம்

சென்னை,

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமியும்,  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கமும் வெற்றி பெற்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே மத்திய அரசில் எம்பிக்களாக உள்ள நிலையில்,  எந்தப் பதவியை ராஜினாமா செய்வது என்பது தான் பெரும் சிக்கலாக வந்து நின்றது.

இந்நிலையில், நாளை வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ-வாக பதவி ஏற்க இருக்கும் நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக-வின் முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் இருவரும் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதால் இருவரும் எம்.பி.பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *