தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் : ஜிம்பாப்வே ஏமாற்றம்

ஹராரே,

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி வீரர்கள் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றனர்.  2வது டெஸ்ட் போட்டி கடந்த 7ந்தேதி ஹராரேவில் தொடங்கியது.  டாஸ் வென்று முதலில் பேட்டிங செய்த பாகிஸ்தான் அணி  8 விக்கெட்டுகள் இழப்புக்கு 510 ரன்கள் சேர்த்திருந்தது. இதனை தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது.

நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 60.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் சேர்த்து பாலோ-ஆன் ஆனது. இதனால், 2வது இன்னிங்சையும் ஜிம்பாப்வே விளையாடியது.  இதிலும் அந்த அணி திணறியது.  3வது நாள் ஆட்ட நேர முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 220 ரன்கள் எடுத்து இருந்தது. தொடர்ந்து  இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் ஜாங்வி 37 ரன்கள் எடுத்திருந்தபொழுது, ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

முஜாராபானி 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.  68 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஜிம்பாப்வே 231 ரன்கள் சேர்த்திருந்தது.  இதனால், பாகிஸ்தான் அணி ஓர் இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  அதனுடன் 2-0 என்ற புள்ளி கணக்கில் தொடரையும் கைப்பற்றி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *