யூனிஸ்கான் சாதனையை முறியடித்த அபித் அலி

ஹராரே,

ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாகிஸ்தான் அணி வீரர்கள் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வருகின்றனர்.  2வது டெஸ்ட் போட்டி கடந்த 7ந்தேதி ஹராரேவில் தொடங்கியது.  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் பட் (2) ரன்களில் வெளியேறினார். ஆனால், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபித் அலி அதிரடியாக விளையாடினார்.  அவர் 29 பவுண்டரிகளை விளாசினார்.  215 (407 பந்துகள்) எடுத்து கடைசி வரை கடைசி வரை களத்தில் இருந்தார்.  இதன் மூலம் ஜிம்பாப்வேயில் அவர் அடித்த முதல் இரட்டை சதம் என்ற பெருமையுடன், அந்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பின்னர் யூனிஸ் கானின் அதிகபட்ச ஸ்கோரை முறியடித்து சாதனை படைத்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *