ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவது சிரமம் : கங்குலி

கொல்கத்தா,

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையே கடந்த மாதம் 9-ந் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கியது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அனைத்து வீரர்களின் நலன் கருதி தற்போது ஐபிஎல் போட்டி மறு தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் தற்போது தங்களது சொந்த நாட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளை இந்தியாவில் நடத்துவது மிகுந்த சிரமம். தற்போது இந்த தகவலினால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து விரைவில் போட்டி நடத்துவது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் கங்குலி தகவல் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *