கொரோனா தொற்று : கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா தந்தை மரணம்

மும்பை,

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்த வரும் நிலையில்,  இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருபவருமான பியூஸ் சாவ்லாவின் தந்தை கொரோனா பாதிப்புக்கு பிறகு உயிரிழந்துள்ளார்.

தனது தந்தை உயிரிழப்பு குறித்து இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பியூஸ் சாவ்லா, தந்தை இல்லாமல் எனது வாழ்க்கை முன்பு போல் வாழ்க்கை முன்பு போல் இருக்காது எனது பலத்தின் தூண் போன்ற நபரை இழந்து விட்டேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.  மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும் பியூஸ் சாவ்லாவின் தந்தை இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *