கொரோனா வழிகாட்டும் விதிமுறைகளை சரிவர பின்பற்றுவது அவசியம்

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை கடந்த 2 மாதங்களாக தொற்றுப்பரவல் தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கிறது. முதல் அலையை விட இந்த 2-வது அலைதான் இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி உள்ளது. முதல் அலையைத் தொடர்ந்து மக்களிடம் நிலவிய சாதாரண அணுகுமுறைதான் கொரோனா மீண்டும் தலையெடுக்க காரணமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். உருமாறிய கொரோனாவை சுட்டிக்காட்டுகிற ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர். முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன், இதுபற்றி அவர் பேசும்போது, “கொரோனா வழிகாட்டும் விதிமுறைகளை சரிவர பின்பற்றி வந்து, கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல், சிகிச்சை, பரிசோதனை ஆகியவற்றை கடைபிடித்து வந்தால், எல்லா இடங்களிலும் 3-வது அலை தாக்கம் இருக்காது, எங்கும் தாக்காமல் கூட போகலாம் என்றும் அவர் தெரிவித்தார். கொரோனா 3-வது அலைத்தாக்கம், மாநிலங்களில், உள்ளூர் மட்டத்தில், நகரங்களில், மாவட்டங்களில் கொரோனா வழிகாட்டும் விதிமுறைகளை எந்தளவுக்கு வலுவாக அமல்படுத்தப்படுகிறது என்பதைப்பொறுத்துத்தான் அமையும் எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *